மக்கள் ஜனநாயகம்
Saturday, August 27, 2011
காதலியே! சுத்த வேதாந்த மெளனமே!- நீயென்
சித்த சித்தாந்த ராசியமே!-அன்பு
நித்த நாதாந்த அனுபவமே!-
என்றும் நீயென் வாழ்வின்
புத்த புதிதான புத்தகமே!
ஏகமோ?இல்லை அநேகமோ?
இயற்கையோ? இல்லை செயற்கையோ?-சித்தோ/
தேகமோ? பொதுவோ?தனிமையோ?
சிறப்பதோ?பெண்ணே!
காதலின்மெய்யன்பே!
பூமண மாமனம் பூரண மனங்கொள்ள
பொன்மனம் தருங்குணம் பூமகள் தினம்வரும்
தேன்மலர்த் தோழியே!
சோதியாய் என்னுள்ளம் சூழ்ந்த மெய்ச்சுடரே!-இதய
உள்ளொளி ஓங்கிட-அன்பு
உயிரொளி விளங்கிட
கண்விழி காட்டிய
காதலின்மெய்யன்பே!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)