காதலியே தேன்சுவையே ! கனிரசமே !
காதலியே வான்மழையே குளிர் நிலவே!
காதல் மொழி கண்ணதிலே சொன்னவளே!
காதல் விழி நெஞ்சினில் கலந்தவளே!
காதல் வழி வகுத்து தந்தவளே!
காதல் ஒளியாகி சிரிப்பவளே!
காதலியே தேன்சுவையே ! கனிரசமே !
காதலியே வான்மழையே குளிர் நிலவே!
Monday, November 9, 2009
வாழ்வின் உண்மைப்பொருளாகியே மகிழ்ச்சியானவளே!
மெய்ப்பொருள் சொன்னாள் மெல்லிய லாளே-இல்லற
தன்பொரு ளாகிய தத்துவங் கூட்டிய கருப்பொருளே-தனது
கைப்பொரு ளாக மழலையை கொள்ளாத மாண்பினளே!வாழ்வின்
உண்மைப்பொருளாகியே மகிழ்ச்சியானவளே!
தன்பொரு ளாகிய தத்துவங் கூட்டிய கருப்பொருளே-தனது
கைப்பொரு ளாக மழலையை கொள்ளாத மாண்பினளே!வாழ்வின்
உண்மைப்பொருளாகியே மகிழ்ச்சியானவளே!
சுந்தரத்தமிழே பேரழகே! அன்பின் அன்பே பண்பின் பண்பே துணைவியே சமத்துவமாகவே வாழ்ந்திருப்போமே!
எண்ணுதற்கு எட்டா எழிலே!!என்னுயிரே இன்னுயிரே! மனைவியே !
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே ! பேரின்பமே! மாசறுமுத்தே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் பகுத்தறிவே! நல்லறிவே!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே ! இல்லறமாம் நல்லறமே!
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே ! துணையே எந்தோழியே!
தோற்றச் சுடர் ஒளியே சொல்லாத நுண் உணர்வே!சுந்தரத்தமிழே பேரழகே!
அன்பின் அன்பே பண்பின் பண்பே துணைவியே சமத்துவமாகவே வாழ்ந்திருப்போமே!

Subscribe to:
Posts (Atom)