Sunday, March 14, 2010

எல்லாரும் எல்லாமும் பெற்று எல்லாரும் வாழும் சமுதாயத்திலே மாறாத சுவர்க்கம் தொடருமடா!,

கல்லில் பிறக்கும், கதிர் மணியடா!; காதலி
சொல்லில் பிறக்கும் இன்பமடா-எல்லாரும் எல்லாமும் பெற்று
எல்லாரும் வாழும் சமுதாயத்திலே மாறாத சுவர்க்கம் தொடருமடா!,
இல்லாமை இல்லாத தேசத்திலே என்னாளும் துன்பமென்பது இல்லையடா!

எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?

எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?
கள்ளிவயிற்றிலும் அகிலும் பிறக்குமடா!; மான்தனிலும்
ஒளியழகாம் அரிதாரமும் தோன்றுமடா; விலைமதிப்பில்லாத முத்தும் கடலுள்
உருவாகுமடா! எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?