Monday, November 9, 2009

சுந்தரத்தமிழே பேரழகே! அன்பின் அன்பே பண்பின் பண்பே துணைவியே சமத்துவமாகவே வாழ்ந்திருப்போமே!

எண்ணுதற்கு எட்டா எழிலே!!என்னுயிரே இன்னுயிரே! மனைவியே !
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே ! பேரின்பமே! மாசறுமுத்தே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் பகுத்தறிவே! நல்லறிவே!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே ! இல்லறமாம் நல்லறமே!
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே ! துணையே எந்தோழியே!
தோற்றச் சுடர் ஒளியே சொல்லாத நுண் உணர்வே!சுந்தரத்தமிழே பேரழகே!
அன்பின் அன்பே பண்பின் பண்பே துணைவியே சமத்துவமாகவே வாழ்ந்திருப்போமே!

No comments:

Post a Comment