Tuesday, October 20, 2009

இல்லறம் அல்லது நல்லறம் அன்று. நல்லறம் தானே இல்லறம் ஆகும்

இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
நல்லறம் தானே இல்லறம் ஆகும்
மனைவியை துணைவியாய் ஆக்காத பேர்களுக்கு
மனையென்பது சிறையாகும்
துணைவியை தோழியாக மாற்றாத இல்லறத்தில்
என்னாளும் சுகமில்லை
ஆண்டான் அடிமையும் பெண்ண்டிமையும் இல்லாத
உலகத்தை உருவாக்கிடுவோம்!
அதிகாரமும் அடிமைத்தனமும் இல்லாத இல்லறத்தில்
இன்பத்திற்குப் பஞ்சமில்லை
தாலியென்பது அடிமையின் அடையாளச் சின்னமில்லை=-அது பண்
பாட்டுவழி வந்த இல்லறத்தின் ஒழுங்குமுறையாகும்!
தாலியென்பது அடிமைச் சாசன அடையாளமென்றபோது -அதை
தவிர்த்தல் என்பதுகூட இல்லறமாம் நல்லறமாகும்!

No comments:

Post a Comment