Sunday, October 11, 2009

இனிதே இனிதே ! முத்தான காதலியின் அன்புடைய வாய்சொல்லைக் கேட்பது இனிதே இனிதே!

இனிதே இனிதே ! முத்தான காதலியின்
அன்புடைய வாய்சொல்லைக் கேட்பது
இனிதே இனிதே!
அழகிய அகன்ற வானத்திலே குளிர் நிலவினைக் காண்பதும் இனிதே இனிதே!
மழலையின் தத்து நடை காணுதல் இனிதே இனிதே!
மழலையவர் தேன்மதுரச் சொல்கேட்பதும் இனிதே இனிதே!
இம்மண்ணில் வாழ்கின்ற உயிர்களெல்லாமே உரிமையுடன் வாழ்வது இனிதே இனிதே!
தம்தேச மக்களின் உயர்வினை எண்ணி உழைத்தல் மிகவும் இனிதே இனிதே!
எத்தனை அறிவு கொண்ட ஞானியாய் இருந்தாலும் எந்த பொருளையும் ஆராய்ந்துசொல்லும் , செயலும் இனிதே இனிதே!
எல்லா உயிர்களையும் சரிசமமாய் பாவித்து முறைசெய்தல் இனிதே இனிதே!
பல்லாயிரம் ஆண்டு நன்மையைச் சொல்லும் நூலகளைக் கற்பதுவும்இனிதே இனிதே!

2 comments:

  1. இனிதே இனிதே - இகவைதையினைப் படிப்பதும் இனிதே - ரசிப்பதும் இனிதே

    நல்வாழ்த்துகள்

    மதுரையா - எங்கே - நானும் மதுரை தான்

    ReplyDelete
  2. இந்த வேர்டு வெரிபிகேஷனை எடுத்து விடக் கூடாதா

    ReplyDelete